Published by R. Kalaichelvan on 2018-10-20 11:42:36
இத்தாலி வீசா பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முரவில பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பண மோசடிக் கும்பல் சிக்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட பண மோசடிக் கும்பலில் 4 இளைஞர்களும் ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம்,நாத்தாண்டிய மற்றும் குருநாகல் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.