அநாதரவான நிலையில் இருந்த 14 மற்றும் 11 ஆகிய வயதுயுடைய இரு சிறுமிகளை துஷ்பிரயோகம்  செய்த தாயின் சகோதரனைத் தேடி பதுளைப் பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.

குறிப்பிட்ட சிறுமிகளின் தந்தை இறந்த நிலையில் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக தாய் மத்திய கிழக்கு நாடொன்றிற்கு சென்றிருந்தார். தாயின் சகோதரியின் வீட்டில் குறிப்பிட்ட இரு சிறுமிகளும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

ஆனாலும் அச் சிறுமிகள் தமது சிறிய தாயார் வீட்டில் அநாதரவான நிலையிலேயே இருந்ததாக அச்சிறுமிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுமிகளின் மாமனாரான நபர் இச்சிறுமிகளைப் பயமுறுத்தி அச்சிறுமிகள் மீது அடிக்கடி துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். 

இச்சிறுமிகள் தனது மாமனாரின் ஊடாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை பதுளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து  பொலிஸார் சிறுமிகளின் மாமனாரைக் கைது செய்ய முற்பட்ட போதிலும் அந் நபர் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியிருப்பதால் அவரைக் கைது செய்ய முடியவில்லையென்றும் ஆனாலும் அந் நபரை விரைவில் கைது செய்ய முடியுமென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.