தென் ஆபிரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகியுள்ளனர்.

பாதையில் சென்று கொண்டிருந்த லொறியில் டயர் திடீரென வெடித்ததால் குறித்த லொறி முன்னாள் சென்ற வாகனங்களின் மீது மோதியதாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தினால் படுகாயமடைந்த நால்வரை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.