பூமிக்கு 2வது நிலவு

Published By: Digital Desk 4

20 Oct, 2018 | 10:06 AM
image

சீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை 2022 ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. 

உலகில் உள்ள பெரும்பாலான பொருட்களுக்கு சீனாவில் போலி மாதிரிகள் உள்ளன. அந்த வகையில், சீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இயற்கை நிலவு சூரியனிலிருந்து சக்தியை பெருவது போல, இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கை கோள்கள் மூலம் சக்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதற்கான முதல் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்தால், 2022 ஆம் ஆண்டு இந்த செயற்கை நிலவுகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நிலவின் மூலம், மின்வசதி இல்லாத கிராமப்பகுதிகளிலும், பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளிலும் வெளிச்சம் பெற முடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த செயற்கை நிலவானது இயற்கையான நிலவை விட 8 மடங்கு ஒளிரும் சக்தி கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ மனிதன் தயாரித்த அனைத்து பொருட்களுக்கும் சீனா போலி மாதிரி செய்துவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியின் மூலம் இயற்கையின் தலையிலேயே சீனா கைவைத்துவிட்டது என நகைச்சுவையாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26