கொலைச் சதி விவ­காரம் தொடர்பில் பணி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ள முன்னாள் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க குற்றப் புலனாய்வுப் பிரிவின் 09 மணி நேரத்துக்கும் அதிகமான விசாரணைகளின் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.

நேற்­றைய தினம் இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசேட வாக்குமூலம் நேற்று மாலை ஆறு மணி ஆகும் போது நிறுத்­தப்­பட்­ட­தா­கவும் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக இன்று குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் மனித படு­கொ­லைகள் குறித்த விசா­ரணை அறையில் ஆஜ­ரா­கு­மாறு தற்­கா­லி­க­மாக பணி இடை­நீக்கம் செய்­யப்­பட்­டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்­வா­வுக்கு அறி­வு­றுத்தல் வழங்கப்பட்டது.

இதன் பிரகாரமே அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

நேற்றைய தினம் இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிர­சன்ன அல்விஸ் உள்­ளிட்­டோரை கொலைச் செய்யும் வித­மாக பொலிஸ் உள­வா­ளி­யான நாமல் குமார என்­ப­வ­ருடன் உரை­யா­டி­ய­தாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குரல் பதி­வு­களை மையப்­ப­டுத்தி விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. 

அத்­துடன் கடந்த செப்­டெம்பர் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை பயங்­க­ர­வாத புல­னாய்வு பிரி­வி­லி­ருந்த எல்.எம்.ஜி. துப்­பாக்­கி­களை உரிய பதி­வுகள் இன்றி வெளியே எடுத்துச் செல்ல தனக்கு கீழ் சேவை­யாற்றும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­ய­மைக்­கான காரணம் என்ன? என்பது உள்ளிட்ட விடயங்களும் விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.