வவுனியாவில் தமிழ்- சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா காமினி வித்தியாலயத்தில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது வலயமட்டத்தில் இடம்பெற்ற தமிழ் தினப் போட்டி மற்றும் சிங்கள தினப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், தமிழ், சிங்கள கலாசாரத்தை வெளிப்படுத்தும் மாணவர்களின் பல்துறை சார் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் வவுனியா வடக்கு கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், வவுனியா கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.