NCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் வெள்ளிவிருதை தனதாக்கிய ரோயல் ஃபேர்வூட் பீங்கான் இரண்டாவது வருடமாகவும் தொடர்ச்சியாக பெருமை மிக்க வெற்றியை உறுதிசெய்துள்ளது.தரம் மிக்க வெள்ளை மற்றும் வடிவமைக்கப்பட்ட பீங்கான் மேசைப்பாத்திரங்கள் மற்றும் அணிகலங்களை பாரிய அளவில் உற்பத்திகள் மூலம் பீங்கான் தொழில்துறையில் உலகளாவிய ரீதியில் அங்கீகாரத்தைப் பெற்ற,முன்னணி உலக நிறுவனங்களுக்கு பீங்கான் உற்பத்தி விநியோகஸ்தராகத் திகழும் ரோயல் ஃபேர்வூட் பீங்கான் லிமிட்டட்ரூபவ் 2018 NCE ஏற்றுமதி விருதில் பாரிய கனிமப் பொருட்கள் பிரிவில் வெள்ளிவிருதைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. கனிமப் பொருட்கள் பிரிவில் தங்க விருது வழங்கப்படவில்லையென்பதால் உயர்ந்த விருதான வெள்ளிவிருதை ரோயல் ஃபேர்வூட் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1994ஆம் ஆண்டு கூட்டிணைக்கப்பட்டு 1997ஆம் ஆண்டு வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பித்தது முதல் சுமார் 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில்ரூபவ் ரோயல் ஃபேர்வூட் பீங்கான் முதன் முதலில் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டதுடன், தொடர்ச்சியாக ஐரோப்பா, ஜப்பான்,அவுஸ்திரேலியா,ஸ்கன்டிநேவியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான மதிப்புவாய்ந்த பீங்கான் மேசைப்பாத்திர உற்பத்தியாளராக விளங்குகிறது. 

கம்பனியின் பெருமைக்குரிய சர்வதேச வாடிக்கையாளர்கள் பட்டியலில் Debenhams,Portmerion, Oneida, House of Fraser, John Lewis, Jashanmal, Jumbo Retail, Joules, Crate & Barrel, Country Road, Laduree, Tchibo, Notneutral, XXX Lutz, Lenox, Porsgrund,Fischer, Ritzenhoff, Migross, Ripley, Thun, Narumi, El Corte Ingles, Berghoff, Yalco, Weissesstal and Galerfia Kaufhof என்பன உள்ளடங்குகின்றன. 

இதற்கு மேலதிகமாக உலகிலுள்ள பல்வேறு டிப்பார்ட்மன் ஸ்டோர்ஸ்கள் ரோயல் ஃபேர்வூட்ஸின் வாடிக்கையாளர்களாகும். 

சர்வதேச தரத்துக்கு ரோயல் ஃபேர்வூட்ஸ் பீங்கான் உற்பத்திகளை வழங்குவதன் ஊடாக உலகளாவிய ரீதியில் 40ற்கும் அதிகமான நாடுகளில் சிறந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த வெற்றி தொடர்பில் கருத்துத் தெரிவித்த ரோயல் ஃபேர்வூட்ஸ் பீங்கானின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொஷான் பெர்னான்டோ,“தொடர்ச்சியாக இரண்டாவது வருடமும் இந்த விருதுக்குத் தெரிவாகியிருப்பது எமக்குப் பெருமையாகவுள்ளது. 

நாம் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளும் சர்வதேச தரத்தில் இருக்கவேண்டும் என்பதை பேணிவருவதால் சர்வதேச வாடிக்கையாளர்களிடம் சிறந்த மரியாதை கிடைத்திருப்பதுடன், எம்மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

 எமது செயற்பாடுகளில் தொடர்ந்தும் முன்னேற்றங்களை உறுதிப்படுத்துவதுடன், உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் உள்ள எமது பங்குதாரர்களுக்கான பொறுப்பையும் நாம் உச்ச கவனத்தில் கொண்டுள்ளோம்.

மோசமான வர்த்தக சூழலிலும் நாம் தொடர்ந்தும் நிலைத்திருக்க இதுவே எமது இரகசியமாகும்” என்றார்.

இலங்கை ஏற்றுமதியாளர்களின் சிறப்பான வெளிப்பாட்டை அடையாளம் கண்டு அவற்றை கௌரவிக்கும் இலங்கை ஏற்றுமதியாளர் சம்மேளனம் 26 வருடத்தைக் கொண்டாடுகிறது. தனது சகல திட்டங்களிலும் உயர்ந்த துறைசார் தரத்தைப் பேணுவதால் கடந்த வருடங்களில் ஏற்றுமதியாளர் சம்மேளனத்தால் சிறந்த அடைவுகளைப் பெறமுடிந்துள்ளது.

 இம்முறை பெருமைக்குரிய இந்த விருதுக்கு பெரும் எண்ணிக்கையானவர்கள் விண்ணப்பித்திருந்தனர். 

பொதுவான ஏற்றுமதி பிரிவுக்கு அப்பால்,ஏற்றுமதி வெளிப்படுத்தல்,சந்தைஃஉற்பத்தி அபிவிருத்தி,பெறுமதி சேர்ப்பு, நிதி வெளிப்படுத்தல்,வினைத்திறனான முகாமைத்துவ முயற்சிகள், நிலைப்புத் தன்மை,தரமான முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்தல்,வினைத்திறனான சக்திவள பயன்பாடு மற்றும் கழிவுமுகாமைத்துவம்,உலகளாவிய ரீதியில் காணப்படும் தேவைக்கு ஏற்ற வகையில் உற்பத்திகளில் புத்தாக்கம் செய்தல், அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் ஏற்றுமதி கொள்கைகளை மதித்தல் போன்றபல்வேறு விடயங்கள் விருதுகளின் போது கவனத்தில் கொள்ளப்பட்டன.

விருதுவழங்கும் நிகழ்வில் நெதர்லாந்துக்கான தூதுவர் ஜொஆன் டொனேவார்ட் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் 99x டெக்னோலஜிஸ் லிமிடெட்டின் ஸ்தாபகரும்,நிறைவேற்று அதிகரியுமான மனோ சேகரம் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.

“நாம் எப்பொழுதும் எம்மைநாமே சவாலுக்கு உட்படுத்திக் கொள்வதுடன்,எமது தற்போதைய நிலைக்கு அப்பால் சென்று சிந்தித்துக்கொண்டிருப்போம். 

பெருநிறுவன மட்டம் மற்றும் துணைநிறுவனங்களுக்கிடையில் ஆழமான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பது எமக்கு வலுச்சேர்க்கும்” என Ambeon Capital PLC மற்றும் Ambeon Holdings PLC நிறுவனங்களின் குழும முகாமைத்துவப் பணிப்பாளரும் நிறைவேற்று அதிகாரியுமான முரளி பிரகாஷ் தெரிவித்தார். “ரோயல் ஃபேர்வூட்ஸ் பீங்கானுக்கு இரண்டாவது வருடமும் தொடர்ச்சியாக இந்த விருது கிடைத்திருப்பதானது எமது குழுமத்தின் உற்பத்திகள் மற்றும் செயற்பாடுகளை முன்னேற்றுவதில் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது” என்றார்.

ரோயல் ஃபேர்வூட் பீக்கான் தனது இளமையான மற்றும் பல்வேறு நிறங்களைக் கொண்ட உற்பத்திகளால் மதிப்பைப் பெற்றுள்ளது. அது மாத்திரமன்றி in-glaze, on-glaze, under-glaze,கைகளினால் வர்ணம் தீட்டப்பட்ட,செதுக்கப்பட்ட மற்றும் மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடிய பரந்துபட்ட தயாரிப்புக்களால் வாடிக்கையாளர்களால் கவரப்பட்டுள்ளனர். 

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் ரோயல் ஃபேர்வூட் பல வர்ணங்களைக் கொண்ட உற்பத்திகளை வழங்கி வருகிறது.

பீங்கான் உற்பத்திகளின் வடிவமைப்புக்கள் இதன் மற்றுமொரு தனித்துவமான பகுதியாகும். 

இந்த வடிவமைப்புக்கள் உலகத்தில் உள்ள பீங்கான் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்திருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

எமது நிறுவனம் தற்பொழுது பன்னிரண்டு முக்கிய வடிவங்களில் உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றது. 

அவை Oxford, Princeton, Sofia, Helsinki, Coupe, Margia, Sunil, Colorado, Margo, Romantica, Dima,மற்றும் Maria என்பவற்றை உள்ளடக்கியுள்ளன.

ரோயல் ஃபேர்பூட் பீங்கான்,டன்கொட்டுவ குழுமத்தின் உறுப்பினர் என்பதுடன்,Ambeon Holdings PLC இன் உபநிறுவனமாகும். ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் தரமானதும்,நவீனமயமானதுமான பீங்கான் தெரிவுகளை வழங்குவதில் இளமையான,துடிப்பான மற்றும் வர்ணமயமான நிறுவனமாக இது திகழ்கிறது. 

இலங்கை,நியூசிலாந்து,பிரித்தானியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து மூலப்பொருட்களைப் பெற்று உலகில் பெயர் பெற்ற இயந்தி உற்பத்தியாளர்களான ஜேர்மனியின் NetschzGmbh of Germany,பிரித்தானியாவின் Drayton Kilns Co. Ltd ,Kajiseki (Takahama) மற்றும் ஜப்பானின் S.K.K.ஆகியவற்றின் தொழில்நுட்பங்களைப் பெற்று தரமான பீங்கான் உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. சர்வதேச தரம் மற்றும் உலக சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டதாக ரோயல் ஃபேர்வூட்ஸ் பீங்கான் உற்பத்திகள் அமைந்திருப்பதை கம்பனி உறுதிப்படுத்துகிறது.