(எம்.எப்.எம்.பஸீர்)

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில்  சி.ஐ.டி யினரால் வழக்கு பொருளாக முன்வைக்கப்பட்டுள்ள டிபெண்டர் வண்டியை அரச இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்த கொழும்பு மேலதிக நீதிவான் இசுறு நெத்திகுமார இன்று உத்தரவிட்டுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவின் சிரிலிய சவிய வேலைத்திட்டத்திற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த குறித்த டிபெண்டர் வண்டியில் உயிரியல் , வெடிபொருள்  துகள்கள் அல்லது ஆடைகளின் துண்டுகள் எதை ஏனும் டிபெண்டர் வண்டிக்குள் உள்ளதா என்பதை கண்டறிய சீ.ஐ.டீ முன்வைத்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

தற்போது சி.ஐ.டி பொறுப்பிலுள்ள குறித்த டிபெண்டர் வண்டியை  அரச இரசாயண பகுப்பாய்வாளருக்கு அனுப்பி இந்த அறிக்கையை பெறுவதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.