தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தால் கொழும்பு நகர மண்டபப் பகுதி, வோட் பிளேஸ் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடை மற்றும் மேலும் சில மாணவர்களின் மாணவர் தகுதியை இரத்து செய்தமைக்கும் எதிராக மாணவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.