(ஆர்.விதுஷா)

நாடளாவிய ரீதியில் இன்று காலை 6 மணியுடன் நிறைவு பெற்ற 24  மணிநேரத்துக்குள் இடம் பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன விபத்துக்களில் இருவரும், முச்சக்கர வண்டி  விபத்தில் ஒருவரும்  பாதசாரி ஒருவரும் உள்ளடங்கலாக நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்துக்கள் பாதுக்க, மொறகஹன, அஹங்கம மற்றும்  குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.