திருக்கோவில் பிரதேச நிலப்பரப்பளவு 0.5 கிலோ மீற்றாக குறைந்துள்ளது இதணை அரசு வர்த்தமானி மூலம் வெளியிடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, திருக்கோவில் பிரதேச சபையின் 8 ஆவது கூட்டத் தொடர் உப தவிசாளர் சின்னத்தம்பி விக்கினேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் 15 உறுப்பினர்களுடன் சபையின் செயலாளரும் கலந்து கொண்டு இருந்ததுடன் திருக்கோவில் பிரதேசத்தில் சேதமடைந்துள்ள வீதிகள் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டது.

இதன் ஒரு முக்கிய விடயமாக திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடல் அரிப்பு காரணமாக சுமார் 0.5 கி.மீற்றர் தூரம் நிலப்பரப்பு குறைவடைந்து சென்றுள்ளதாகவும் இதனைக் கருத்தில் கொண்டு தற்போது இருக்கும் நிலப்பரப்பினை அரச வர்த்தமானியில் வெளியீட இச் சபையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளூட்சி அமைச்சின் ஊடாக ஜனாதிபதிக்கு மசோதா ஒன்றினை அனுப்பி வைக்க வேண்டும் என திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினருமான விவேகானந்தராஜா புவிதராஜன் சபையில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.