ஆயுதங்ளுடன்  கைதுசெய்யப்பட்ட மொஹமட் இம்தியாஸ் கதாரை விளக்கமறியலில் வைக்குமாறு நீமன்றம் உத்தரவிட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவனெல்லை தொகுதியின் இணை அமைப்பாளருமான மொஹமட் இம்தியாஸ் காதர் நேற்றையதினம் ஆயுதங்களுடன்  விசேட அதிரடி படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.