(கொல்கத்தாவிலிருந்து நெவில் அன்தனி)

கடந்த முறை இலங்கைக்கு நாங்கள் கடும் சவால் விடுத்தபோது சங்கக்கார, மஹேல போன்றவர்கள் இருந்தனர். ஆனால் இம்முறை அவர்கள் இல்லை. எனவே வெற்றிபெறுவதற்கான நல்ல வாய்ப்பு எங்களுக்கு இருக்கின்றது என ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வேகப்பந்துவீச்சு பயிற்றுநர் மனோஜ் பிரபாகர், தலைமைப் பயிற்றுநர் இன்சமாம் உல் ஹக் ஆகியோரிகள் பயிற்றுவிப்பின்கீழ் ஆப்கானிஸ்தான் பெரு முன்னேற்றம் அடைந்துள்ளது.

இவர்கள் இருவரும் சர்வதேச அரங்கில் மிகுந்த அனுபவசாலிகள் என்பதால் நிறைய கற்றுக்கொள்ளக் கிடைத்ததாகவும் இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றிபெற முயற்சிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.