வடிவேல் சுரேஸ்ஸும் ,ஆறுமுகம் தொண்டமானும் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமென  பொகவந்தலாவ பெற்றசோ தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.குறித்த போராட்டம் பொகவந்தலாவ,பலாங்கொடை பிரதான வீதியின் லொயினோன் பகுதியில்  இன்று காலை இடம்பெற்றது.

200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட  ஆர்ப்பாட்டத்தினால் சில மணித்தியாலங்கள் வரை பொகவந்தலாவ,பலாங்கொடை பிரதான வீதி போக்குவரத்து தடைப்பட்டது.அரச ஊழியர்களுக்கு வாழ்க்கை செலவிற்கேற்ப சம்பளம்உயர்வு கிடைக்கின்றது,ஆனால் தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வுக்கு போராட வேண்டியுள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்துடன் உடன் கூட்டொப்பந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஆறுமுகம் தொன்டமான், வடிவேலு  சுரேஸ் ஆகியோர் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுத்தரவேண்டுமெனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.