திருடர்களின் நடமாட்டம் அதிகரிப்பு ; மக்கள் விசனம்

Published By: Daya

19 Oct, 2018 | 12:10 PM
image

 துறைநீலாவணையிலிருந்து பெரியநீலாவணைக்கு செல்லும் குமரப்போடியார் குளக்கட்டுவீதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனைகட்டுப்படுத்துவதற்குபொலிஸார் நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டுமெனபொதுமக்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

குறித்த பாதையானது துறைநீலாவணைக் கிராமத்திற்கு செல்லக் கூடிய இலகுவானது இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான அரச உத்தியோகத்தர்கள் மாணவர்கள் இபொதுமக்கள் தமது பயணத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.

சனநடமாட்டம் குறைவான நண்பகல் வேளைகளில் மோட்டார் சைக்கிளில் குறித்த வீதியில் இனந்தெரியாத நபர்கள் நடமாடுவது மாத்திரமல்லாது தனிமையில் குறித்த வீதியில் பயணிக்கும் பெண்களின் தங்க ஆபரணங்களை அபகரித்து செல்வதாக சுட்டிக்காட்டுகின்றனர். 

அண்மையில் இரு பெண்கள் குறித்த வீதியில் பயணித்துக் கொண்டிருக்கும் போதுமோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்க ஆபரணங்களை திருட முயற்சியினை மேற்கொண்ட போது குறித்த பெண்களின் துணிகரமான செயற்பாடு காரணமாக திருடர்களின் முயற்சிகைவிடப்பட்டிருந்தன.

கடந்த காலங்களில் குறித்த வீதியில் பலரது தங்கஆபரணங்கள் திருடர்களினால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளநிலையில் பொலிஸாரின் தலையீடு காரணமாக குறித்த சம்பவம் குறைந்திருந்தது.

ஆனால் தற்போது திருடர்களின் கைவரிசைஆரம்பித்துள்ளதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவது மாத்திரமல்லாது இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டுமென பொது அமைப்புக்கள் கோரிக்கையினை முன்வைக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்க மாலைகளை திருடிச்...

2025-03-19 11:01:14
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 10:35:33
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3...

2025-03-19 09:22:23
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47