கொழும்பை அண்டியுள்ள சில பகுதிகளில் இன்று நண்பகல் முதல் நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பை அண்டிய சில பகுதிகளில் இன்று நண்பல் 12 மணி முதல் 17 மணித்தியாலங்கள் வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

கொழும்பு - 05, 06, 07 மற்றும் கொழும்பு - 08  ஆகிய பகுதிகளிலும் கோட்டே, பொரலஸ்கமுவ, மகரகம மாநகர சபை பகுதியில்  குறித்த நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.