இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் ஸ்டில்களை வைத்து விஜய் இந்த படத்தில் 2 வேடத்தில் அல்லது 3 வேடங்களில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் உண்மையில் விஜய்க்கு இந்த படத்தில் ஒரே வேடம்தான் என்றும், 3 விதமான தோற்றங்களில் அவர் தோன்றுகிறார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

விஜய்-சமந்தா அன்பான ஜோடியின் மகள்தான் நைனிகா என்றும், வில்லன் கோஷ்டியினர் சமந்தாவை கொலை செய்தவுடன் நைனிகாவை மொட்டை ராஜேந்திரன் மூலம் வட நாட்டிற்கு ரகசியமாக அனுப்பிவிட்டு, விஜய் வில்லன்களை பதம் பார்ப்பதாகவும், கடைசியில் நைனிகாவுடன் மீண்டும் அவர் இணைவதுதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.