முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்று காலை 2 ஆவது நாளாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதித் திட்டம் தொடர்பில் வெளியான ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் ஒன்பது மணி நேர விசாரணைகளின் பின்னர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை இன்றைய தினம் மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவிப்பு விடுத்திருந்தனர்.

இதையடுத்து அவர் இன்று இரண்டாவது நாளாகவும் இன்று வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.