மன்னார் வலய கல்வி பணிப்பாளருக்கு மாபெரும் மணிவிழா

Published By: Daya

19 Oct, 2018 | 10:26 AM
image

மன்னார் அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடு கல்வி வலய அதிகாரிகள் இணைந்து  மன்னார் மற்றும் மடு வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற இருக்கும் திருமதி சுகந்தி செபஸ்ரியனுக்காக ஏற்பாடு செய்திருந்த மணிவிழா நிகழ்வானது நேற்று மன்னார் நகரமண்டபத்தில் இடம் பெற்றது.


குறித்த நிகழ்வு மன்னார் பிரதான பாலத்தில் இருந்து ஆரம்பமாகி தேசிய பாடசாலைகளின் பான்ட் இசையுடன் விருந்தினர்களுடன் அழைத்துவரப்பட்டு சிறப்பாக இன்னியம் முழங்க ஊர்வலம் மன்னார் நகர மண்டபத்தை வந்தடைந்தது.


திருமதி சுகந்தி செபஸ்ரியன்னின் கல்விப்பணியும் ஆளுமைப்பண்பும் திறமையன முகாமைத்துவ செயற்பாடும் சேவை நலனும் கவிதைகளாகவும் பாடல்களாக ஆசிரியர்களாலும் அதிபர்களாலும் வாழ்த்துப்பாக்களாக இசைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வின் சிறப்பம்சமாக திருமதி.சுகந்தி செபஸ்ரியன்னின் 36 வருட கால கல்வி சேவையினை நினைவு கூறும் வகையில் மணிவிழா நூல் ஒன்றும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.


திருமதி.சுகந்தி செபஸ்ரியன் 36 வருட கல்விபணியில் பிரதிக் கல்விப்பணிப்பாளராக, வலயக்கல்விப்பணிப்பாளராக, மடு ,மன்னார் மேலதிக கல்விப்பணிப்பாளராகவும் பிரதி செயலாளராகவும் யுத்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் சேவையாற்றியாற்றியுள்ளார்.


குறித்த நிகழ்வில் வட மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , ஏனைய மாவட்ட  கல்விப்பணிப்பாளர்கள் , மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள்,   அதிபர்கள் , ஆசிரியர்கள் சர்வ மதத்தலைவர்கள் அரச அதிகாரிகள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பன் இசையரங்கு

2025-04-22 14:48:43
news-image

பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் வாழ்க்கை வரலாற்று...

2025-04-22 13:26:28
news-image

இலங்கைக்கான‌ மாலைதீவு உயர்ஸ்தானிகர்க்கு கராத்தே நூல்...

2025-04-22 13:24:38
news-image

சித்திரை புத்தாண்டு சிறப்பு நிகழ்வு கொழும்பில்

2025-04-22 10:47:43
news-image

"கதை கேட்டு மகிழுங்கள்" நிகழ்வு

2025-04-21 19:07:48
news-image

ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 14வது...

2025-04-21 18:38:42
news-image

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தயாரித்து வழங்கிய...

2025-04-21 13:24:03
news-image

பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்தின்...

2025-04-20 17:45:51
news-image

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் காரியாலயம்...

2025-04-19 17:40:29
news-image

 "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்"...

2025-04-19 14:33:42
news-image

தமிழ்நாடு ஆளுநர் விருதைப் பெற்ற சொற்பொழிவாளர்...

2025-04-19 14:14:04
news-image

அன்னை பூபதியின் 37 ஆவது நினைவுதினம்...

2025-04-19 12:29:15