ஆப்கானிஸ்தானிலஇடம்பெற்ற தாக்குதலொன்றின் போது ஆப்கானிஸ்தானிற்கான அமெரிக்க படையினரின் தளபதி ஜெனரல் ஸ்கொட் மில்லர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

கந்தகாரில் இடம்பெற்ற தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் முக்கிய படையதிகாரிகள் பலர் கொல்லபட்டுள்ளனர்.

கந்தகாரில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறிக்கொண்டிருந்தவர்கள் மீது அப்பகுதி ஆளுநரின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் போது ஆப்கானிஸ்தானின் புலனாய்வு பிரிவின் தலைவரும் தலைமை பொலிஸ் அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க படைகளின் தளபதி ஸ்கொட் மில்லர்  காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளார்  எனினும் இரு அமெரிக்க பிரஜைகள் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட நபரும் கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

தலிபான் அமைப்பினர் இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளனர். கொல்லப்பட்ட புலனாய்வு தலைவரும் பொலிஸ் தலைவரும் நீண்ட நாட்களாக எங்கள் இலக்காகயிருந்தனர் என குறிப்பிட்டுள்ள தலிபான் அமைப்பு பொலிஸ் அதிகாரி ஈவிரக்கமற்றவர்  எனதெரிவித்துள்ளது.