கபில் தேவின் சாதனையை முறியடிப்பாரா ஜடேஜா ?

Published By: Vishnu

18 Oct, 2018 | 06:57 PM
image

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்  இன்றும் சில தினங்களில் இடம்பெறவுள்ள நிலையில், இந்திய அணியின் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் உலகில் ஏற்பட்டுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதல் போட்டி எதிர்வரும்வரும் 21 ஆம் திகதி கவுகாத்தியில் ஆரம்பமாகின்றது.

ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ள ரவீந்திர ஜடேஜா, ஆசியக் கிண்ணத்தொடரில் சிறப்பாக விளையாடினார். இதையடுத்து, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், ஒருநாள் தொடரிலும் இணைக்கப்பட்டார்.

இந்நிலையில், முதல் இருபோட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் 3 போட்டிகளுக்கான அணியிலும் ஜடேஜாவுக்கு இடம் உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜா முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கபிலதேவ் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 42 போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரின் பந்துவீச்சு சராசரியும் 3.62 ஆகவும், ஒரேமுறை மட்டும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதுதான் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக எடுத்துள்ள அதிகபட்ச விக்கெட்டுகள் ஆகும்.

இந்நிலையில் கபில்தேவின்  இந்த சாதனையை எட்டுவதற்கு ரவிந்திர ஜடேஜாவுக்கு இன்னும் 15 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. 5 ஒருநாள் போட்டிகளில் இந்த 15 விக்கெட்டுகளை ஜடேஜா எட்டுவார் என நம்பப்படுகிறது. 

இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும், ரவிந்திர ஜடேஜா பந்துவீச்சில் நல்ல திறனில் இருப்பதாலும், அவர் இந்த சாதனையை எட்டிப்பிடிப்பார்.

கபில்தேவைத் தொடர்ந்து அனில் கும்ப்ளே மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 41 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 33 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். ஜடேஜா 19 போட்டிகளில் இதுவரை 29 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இன்னும் 15 விக்கெட்டுகளை இந்தத் தொடரில் ஜடேஜா வீழ்த்திவிட்டால் அது வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படும்.

ஆசியக் கிண்ணத் தொடரில் ஜடேஜா 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும், ராஜ்கோட் டெஸ்ட்போட்டியில் 4 விக்கெட்டுகளையும், ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41