வவுனியா குடியிருப்பு பகுதியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதி நீண்டகாலமாக செப்பனிடப்படவில்லை இதனால் பாடசாலை மாணவர்கள், முச்சக்கரவண்டிகள், துவிச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொள்பவர்கள் பெரும் அசௌரியங்களுக்குட்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்கள் அடிக்கடி விபத்துக்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குடியிருப்பு பகுதியிலுள்ள இலங்கை தென்னிந்திய திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் பூந்தோட்டம் மாணவர்கள் பலர் இவ்வீதியை பயன்படுத்தி வருகின்றனர். நீண்டகாலமாகவே இவ்வாறு குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது.
மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் முதல் வாகனச்சாரதிகள் அனைவரும் இவ்வீதியைத்திருத்தித் தருமாறு கோரியுள்ள நிலையிலும் இன்று வரையிலும் இவ்வீதி திருத்தப்படவில்லை.
100மீற்றர் நீளமுடைய வீதியில் சில இடங்களில் பாரிய குண்டும் குழியும் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு சிறுவர் பூங்காவிற்கு பலர் தமது பிள்ளைகளை அழைத்துச் செல்வதிலும் இவ்வீதியூடாகவே எனவே குறித்த வீதியைத்திருத்தி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM