மன்னார் தள்ளாடி விமான ஓடுபாதை அமைந்துள்ள பகுதியில் காணப்படும் பற்றைக்குள் இருந்து  இன்று வியாழக்கிழமை( மாலை ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள பற்றைக்குள் ஒரு தொகுதி வெடி பொருட்கள் காணப்பட்டதை அவதானித்த விமானப்படை வீரர்கள் உடனடியாக பொலிஸார் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்களை மீட்பதற்கு மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில்  இன்று  வியாழக்கிழமை மாலை குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டன.

விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் விமானப்படை வீரர்கள் இணைந்து குறித்த வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.

இதன் போது ஆட்லரி குண்டுகள் -04,சிஸ்ரி மோட்டார் வெடி குண்டு-01, பயூஸ்-04,கைக்கண்டு-01,சிறிய ரக குண்டு-01 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மீட்கப்பட்ட வெடி பொருட்களை செயழிலக்கச் செய்யும் நடவடிக்கைகளில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.