கொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி தலைமையில்

Published By: Daya

18 Oct, 2018 | 04:08 PM
image

வான்வெளி பாதுகாப்பு தொடர்பான சர்வதேச அறிவை இலங்கை மற்றும் வலய நாடுகளுக்கு மத்தியில் பரிமாறிக்கொள்ளும் நோக்குடன் இடம்பெறும் கொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி சிறிசேனவின் தலைமையில் நேற்று முற்பகல் அத்திடிய ஈகல் லேக் சைட் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

 

இலங்கையின் பூகோள மூலோபாய முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான “வான்வெளி மூலோபாயம்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த மாநாடு இலங்கை விமானப் படையினால் நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இலங்கை தொடர்பாக விசேட கவனம் செலுத்தி, தீவொன்றின் பூகோள மூலோபாய முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு சாதகமாக அமையும் வான்வெளி உபாயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடுவதற்காக தேசிய மற்றும் சர்வதேச இராணுவம் மற்றும் அது தொடர்பில் அக்கறை கொண்டுள்ள ஏனைய கல்விமான்களை ஒன்று திரட்டும் பொது தளமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. 

பொது கருப்பொருள் ஒன்றின் கீழ் அறிவு, அனுபவம் மற்றும் சிறப்புத் தேர்ச்சிகளை பரிமாறிக்கொள்வதற்கு உலக இராணுவத் தளபதிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், சர்வதேச புலனாய்வு துறை உறுப்பினர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் இங்கு ஒன்றிணைந்து செயற்படுகின்றனர். 

கொழும்பு வான்வெளி மாநாடு இன்றும் நாளையும் கொழும்பு அத்திடிய ஈகல் லேக் சைட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும். 

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு குழாம் பிரதானி அட்மிரல் ரவீந்தர விஜேகுனவர்தன ஆகியோர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் பிரதானிகள் பலரும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55