அமெ­ரிக்க நடிகர் சார்ளி ஷீன் தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்­ப­தாக பகி­ரங்­க­மாக ஒப்புக் கொண்­ட­தை­ய­டுத்து, அவரின் முன்னாள் காத­லி­க­ளில் பலர் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளானதுடன் அவரின் மூலம் தமக்கும் எச்.ஐ.வி. தொற்று ஏற்­பட்­டி­ருக்­குமோ என அவர்கள் அஞ்­சு­கின்­றனர். 

aids

இதனையடுத்து, சார்ளி ஷீனின் முன்னாள் காத­லி­களில் சுமார் 700 பேர் அவ­ருக்கு எதி­ராக வழக்குத் தொடுக்­கக்­கூடும் என தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. 

ஏற்­கெ­னவே 75 பெண்கள் இது தொடர்­பாக சட்­டத்­த­ர­ணி­களை நாடி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவர் 3 தடவைகள் திரு­மணம் செய்­தவர். சுமார் 5000 பெண்­க­ளுடன் தான் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தா­கவும் முன்னர் கூறி­யி­ருந்தார். 

50 வய­தான நடிகர் சார்ளி ஷீன் தனக்கு 4 வரு­டங்­க­ளாக எச்.ஐ.வி. தொற்று இருப்­ப­தாக கடந்த வாரம் தொலைக்­காட்சி செவ்­வி­யொன்றில் ஒப்­புக்­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.