ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோ குறித்து குற்றம்சாட்டினார் என ஊடகங்களிற்கு தகவல்வழங்கியவர்களை அம்பலப்படுத்தவேண்டும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி ரோ மீது எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை என  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான எந்தவொரு விடயம் குறித்தும்  அமைச்சரவையில் ஆராயப்படவில்லை என்பதே முழு அரசாங்கத்தினதும் நிலைப்பாடாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை  குறிப்பிட்ட போலியான தகவல்கள் இந்திய இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கான முயற்சி என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளதுஎனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் ஒரு குழப்பமான நிலையை தோற்றுவித்துள்ளது என குறிப்பிட்டுள்;;ள அமைச்சர் இதற்கு காரணமானவர்கள் தங்களை வெளிப்படுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

யார் இதற்கு காரணம் என்பதை கண்டுபிடிக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.