மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனைச்சேனை வீதியில்  இளைஞர் ஒருவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்ற எருமையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்கிழமை (16) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில்  மல்லிகைத்தீவு, மணற்சேனை பகுதியைச் சேர்ந்த 19 வயதான குமரகுருபரன் தனுஷ்கரன்  என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில்  எருமையும் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததெனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனின் மரணம் தொடர்பில்  திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஐே.எம். நூறுல்லாஹ்  மரண விசாரணைகளை முன்னெடுத்ததுடன்  மரணத்தில் சந்தேகம் இல்லாமையால் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்துத் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை   மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.