ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில்  18 இளைஞன் ஒருவன் தொழில்நுட்ப கல்லூரியில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கேர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

18 வயது இனைஞன் ஒருவன் வகுப்பறைகளிற்குள் நுழைந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தனது சகாக்களை கொலை செய்துள்ளான்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளாடிஸ்லாவ் ரொஸ்லைவ்கோவ் என்ற 18 வயது இளைஞன் சிற்றூண்டிச்சாலையிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு வகுப்பறையாக நுழைந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் அந்த இளைஞன் தன்னைத்தானே சுட்டுக்கொலை செய்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட இளைஞனின் உடலை காண்பிக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

துப்பாக்கி பிரயோகம் காரணமாகவே பலர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதேவேளை சிறிய குண்டுவெடிப்பொன்றும் இடம்பெற்றதாக ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிற்றூண்டிச்சாலைக்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலர் தாங்கள் வெடிப்புசத்தங்களை கேட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.