267 பிரான்ஸ் பெண்களுடன் இடம்பெற்ற குருந்தூர மரதன் ஓட்டம் 

Published By: Vishnu

18 Oct, 2018 | 12:40 PM
image

கிழக்கின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான பாசிக்குடா கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் குருந் தூர மரதன் ஓட்டம்  இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வினை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் தேசிய ஓருமைப்பாட்டு நல்லிணக்க பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலான ஆகியோர்கள் ஆரம்பித்து வைத்தனர்.

கடந்த 11 ஆம் திகதி மட்டக்களப்பில் ஆரம்பமான CONNAISSANCS எனும் விளையாடடு நிகழ்வு இன்று 18 ஆம் திகதியுடன் பாசிக்குடா கடற்கரையில் முடிவடைந்ததமை குறிப்பிடத்தக்கது. 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனமும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து இப்போட்டி நிகழ்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கிரிக்கெட்,படகுப் போட்டி ,நீச்சல், மரதன் என பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்றைய மரதன் ஓட்டப் போட்டியில்  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 267 பெண் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இவர்களுடன் இலங்கையைச் சேர்ந்த 3 பெண்களும் பங்குபற்றியிருந்தனர்.

கல்குடா கிராமசேவகர் பிரிவிலுள்ள கல்மடுவில்  காலை 6..45 மணிக்கு ஆரம்பமான போட்டியானது விணாயகபுரம்,பேத்தாழை, கருங்காலிச்சோலை ஆகிய கிராமங்கள்  ஊடாக சென்று மீண்டும் பாசிக்குடா கடற்கரையினை காலை  7.50 மணிக்கு சென்றடைந்தனர். நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு வெற்றிப் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இப்போட்டியானது பெண்களுக்கான வலுவூட்ல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளதுடன் மட்டக்களப்பில் காணப்படும் பல்வேறு இயற்கை காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் கண்டுகொள்வதற்க்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டதொரு நிகழ்வாகும் என இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.கடந்த வாரம் மட்டக்களப்பிலுள்ள  கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொப்பிகல மற்றும் வெபர் மைதானம் இருதயபுரம் போன்ற இடங்களிலும் இவர்களுக்குரிய விளையாட்டு நிகழவுகள் இடம்பெற்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41