மதவாச்சி  நகரிலுள்ள தேசிய பாடசாலை  மாணவி  ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய  சம்பவத்துடன்  தொடர்புடைய  ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு 1929 சிறுவர் முறைப்பாட்டுப் பிரிவால்  கிடைக்கப்பெற்ற  தகவலின்  அடிப்படையில்  சம்பவத்துடன்  தொடர்புடைய  குறித்த பாடசாலை ஆசிரியரை நேற்று மாலை மதவாச்சி பொலிஸார் கைது  செய்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும்  தெரியவருவதாவது,

11 ஆம்  தரத்தில் கல்விபயிலும் மாணவி ஒருவரை  இரு சந்தர்ப்பங்களில்  கணினி அறையில்  வைத்து  துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக  மாணவியின்  தாய் சிறுவர் பிரிவுக்கு வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து  சம்பவத்துடன்  தொடர்புடைய  ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை  மதவாச்சி  பொலிஸ்  நிலைய  சிறுவர் மற்றும் மகளிர்  பிரிவைச்சேர்ந்த  பொலிஸ் சார்ஜன்  7959 அசோக தர்மரத்ன  உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.