வவுனியா - புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், 

கொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கி தண்ணீர் ஏற்றிச்சென்ற குளிரூட்டப்பட்ட ஹென்டர் ரக வாகனமும் ஹெக்கிராவையில் இருந்து மல்லாவிநோக்கி நெல்லு வெட்டும் இயந்திரத்தை ஏற்றிசென்ற உழவியந்திரமும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புளியங்குளம்  எரிபொருள்நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் நெல்லு வெட்டும் இயந்திரத்தை ஏற்றிய உழவியந்திரம்  தரித்து  நின்ற சயமத்தில் கொழும்பிலிருந்து வந்த தண்ணீர் ஏற்றி வந்த குளிரூட்டப்பட்ட ஹென்டர் ரக வாகனம் மோதியதிலே குறித்த விபத்து இடம்பெற்றிருப்பதாக  ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் தண்ணீர் போத்தல்கள் ஏற்றி சென்ற வாகனத்தில் பயணம்செய்த   யாழ்பாணத்தை சேர்ந்த  மரியதாஸ் நிறோசன் மரணமடைந்துள்ளதுடன்,  செ.அயந்தன் என்பவரின் கை ஒன்று துண்டிக்கபட்டுள்ளது. 

உழவியந்திரத்தில் இருந்த  இளைஞன் படுகாயமடைந்ததுடன் இன்றுமொருவர் சிறு காயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான  மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.