பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (17-10-2018) பிற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம் நான்கு வருடங்களுக்கு பின்னர் நேற்று இடம்பெற்றதுடன், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அமைச்சுடன் தொடர்பிலான விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர் மஹிந்த சமரசிங்க, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார,மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த மயந்த திசாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, எஸ்.எம்.மரிக்கார் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.