சி.ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா

Published By: Vishnu

18 Oct, 2018 | 08:27 AM
image

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்விஸ்  ஆகி­யோரை கொலை செய்ய சதித் செய்யும் வித­மாக தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­க­ளுக்­காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நால­கவா இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜ­ராகவுள்ளார்.

கொலை­ சதி  விவ­காரம் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக  கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின்  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வா­வுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இர­க­சிய பொலிஸார் முன் ஆஜ­ராக அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் ஆஜ­ரா­க­வில்லை. 

இந் நிலையிலேயே இன்று பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, சி.ஐ.டி.யின் மனிதப் படு கொலைகள் குறித்த விசா­ரணை அறையின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்ஜித் முன­சிங்க முன்­னி­லையில் ஆஜ­ரா­கு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்