(ஆர்.விதுஷா)

கல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள்  இடம்பெறுவதாக  குற்றஞ்சாடிய ஆசிரிய சங்கத்தின் பொதுச்செயலாளர்  ஜோசப் ஸ்டாலின்  குறித்த மோசடிகள் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்ள அரசாங்கம்  சிறப்பு குழுவினை நியமிக்க வேண்டும்.

 அவ்வாறு இல்லாவிடின் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுப்பதாகவும் எச்சரித்தார்.

 ஆசிரியர் சங்க தலைமையகத்தில்  இன்று புதன் கிழமை இடம் பெற்ற  ஊடகவியளாளர் சந்திப்பில்   கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

இன்று  கல்வி அமைச்சு உட்பட  பெரும்பாலான  பாடசாலைகளிலும்  கூட பாரிய அளவிலான ஊழல்கள் இடம் பெற்று வருகின்றன.  

கடந்த காலத்தில்  மாணவர்களுக்காக  சுரக்ஸா  காப்புறுதித்திட்டத்திற்காக  2300 மில்லியன் ரூபாய் வரையில் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கூட மேற்படி திட்டத்திற்காக 240 மில்லியன் ரூபாய்கள்  மாத்திரமே   குறித்த செயற்திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.