இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்தின் வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தலைமையில் இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது.

“பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான திட்டங்களும் சவால்களும்” என்ற கருப்பொருளின் கீழ் இலங்கை பொறியியலாளர் நிறுவனம் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பொறியியலாளர் சம்மேளனத்துடன் இணைந்து இந்த வருடாந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நிரஞ்சனி ரத்னாயக்கவினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும, இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பொறியியலாளர் ஜயவிலால் மீகொட, பேராசிரியர் மொஹான் முனசிங்க ஆகியோர் உள்ளிட்ட கல்விமான்களும் புத்திஜீவிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.