(எம்.ஆர்.எம்.வஸீம்) 

நாடு கடந்த தமிழ் அமைப்புகளின் தேவைக்கிணங்கவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்கின்றது. அத்துடன் அரசாங்கத்தின் இயலாமையே பொருளாதார பிரச்சினைக்கு காரணமாகும். அதனால் இந்த அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் மக்கள் வாழமுடியாத நிலை ஏற்படும் என கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

மேலும் இந்த அரசாங்கம் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால் மக்கள் வாழமுடியாத நிலைமையே ஏற்படும். அத்துடன் நாட்டின் முக்கிய வழங்களும் வெளிநாடுகளுக்கு விற்கப்படும். அதனால் அரசாங்கத்தை வீழ்த்தியே ஆகவேண்டும். அதற்காக நாட்டை நேசிக்கும் மக்கள் எங்களுடன் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டு எதிரணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.