"உள்ளூராட்சி மன்றங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும்"

Published By: Digital Desk 7

17 Oct, 2018 | 06:00 PM
image

"உள்ளூராட்சி மன்றங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும் என்பதுடன் அவை ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்துவதில் அதிக அக்கறையுடன் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்" என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச ஆலோசனை சபை கூட்டம் வேலணை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"மக்கள் வாழும் பகுதிகளையும் அவர்கள் சார்ந்த சூழலையும் முன்னேற்றி அவர்களது வாழ்வியலை ஒரு ஒளிமயமானதாக உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளது.

கடந்த காலத்தில் தீவகத்தில் குறிப்பாக வேலணை பிரதேசத்தில் நாம் பல்வேறு வழிவகையிலும் அபிவிருத்தி செய்து மக்களது தேவைப்பாடுகளை நிறைவு செய்து கொடுத்திருந்தோம். இன்றும் அதை நாம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதிருந்தும் கூட முன்னெடுத்து வருகின்றோம்.

ஆனாலும் இன்னும் குடிநீர், நிரந்தர வாழ்வாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கான தீர்வுகளை நோக்கி நாம் பல செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் மேலும் தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்வு அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.

அந்த வகையில் துரித கதியில் மழைகால இடர்களை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை தயார் செய்து மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47