"நல்லிணக்க தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்  மனோ கணேசன் நிதி ஒதுக்கும் போது வாகரைப் பிரதேசத்தை கவனத்தில் எடுத்திருக்க வேண்டும்" என வாகரைப்பிதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இதுபற்றி அப்பகுதி மக்கள்  கருத்துத் தெரிவிக்கையில்,

"மட்டக்களப்பு மாவட்டத்தில் உள் நாட்டுப்போரினால்  பாதிக்கப்பட்ட பிரதேசமாக வாகரைப்பிரதேச செயலாளர்  பிரிவு காணப்படுகிறது. அங்குதான் புலிகளின் செயற்பாட்டுத் தலைமையகம் இருந்தது அதனால்தான் யுத்தம் எங்களை வெகுவாக பாதித்தது.

உயிர் இழப்பும், உடமை இழப்பும் மற்றைய கிராமங்களோடு ஒப்பிடும்போது மிகமிக அதிகம். வாகரை பலதடவைகள் போர்க்களம் கண்ட பூமி.

இப்பிரதேசத்தை முன்னேற்ற அவர் ஒதுக்கிய நிதி 1 கோடி 50 இலட்சமாகும். சாதாரணமாக சொன்னால் இதனால்  உள் வீதியொன்றைக்கூட செப்பனிட முடியாது. 

நல்லிணக்க அமைச்சர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எங்களது பிரதேச மக்களின் மனம்  அவரது செயற்பாட்டால் வெகுவாக நொந்திருக்கிறது. அவரோடு கூட  இருந்த பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வாகரைப்பிரதேசத்தின் கடந்தகால நிலவரங்களை  அமைச்சருக்கு தெளிவுபடுத்த தவறியிருந்ததை நாங்கள் அறிந்தோம். அவரும் இவ்விடயத்தில் தவறைச் செய்துவிட்டார்." என்றும் தெரிவித்தனர்.