உக்ரைனிடமிருந்து  ரஸ்யா கைப்பற்றிய கிரிமியாவில் கல்லூரியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கேர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இனந்தெரியாத பொருள் வெடித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஸ்ய பாதுகாப்பு படையதிகாரியொருவர் இது பயங்கரவாத செயல் என குறிப்பிட்டுள்ளார்.

வெடிபொருளொன்றே வெடித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள்  மாணவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன

இதேவேளை உள்ளுர் தொலைக்காட்சியொன்று ஆயுதம் தாங்கிய நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர், கல்லூரியில் பல உடல்களை காணமுடிகின்றது தாக்குதல்களை மேற்கொண்ட நபர்களில் ஒருவர் தன்னை வெடிக்கவைத்து பலியாகியுள்ளார் எனகல்லூரியின் தலைவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இது பயங்கரவாத தாக்குதல் பல உடல்களை காணமுடிகின்றது  என குறிப்பிட்டுள்ளஅவர் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் ஆயுதங்களுடன் காணப்பட்டனர் இரண்டாவது தளத்தில்  அவர்கள் கண்ணால் கண்ட அனைவரையும் கொலை செய்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனது மாணவர்களும் உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டுவிட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறிப்பிட்ட தொழில்நுட்ப கல்லூரியில் சந்தேகநபர்கள் மாணவர்களை பணயக்கைதிகளாக பிடிக்க முயன்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.