(நா.தனுஜா)
நாட்டின் பொருளாதாரம் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் பூகோள ரீதியில் பொருளாதார சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பன தொடர்பில் ஆராய வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய பொருளாதாரப் பேரவையின் இருபதாவது கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதை அடுத்து நாடு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய பொருளாதாரப் பேரவை விசேட கவனம் செலுத்தியுள்ளது.
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியினைத் தற்காலிகமாக வரையறுக்கும் அதேவேளை, உள்நாட்டில் அவற்றின் உற்பத்தியினை ஊக்குவிக்க வேண்டும் எனும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியினை வரையறைக்குட்படுத்துவதற்கான பெறுமானங்கள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM