கொழும்பு -15 மட்டக்குளி - காக்கைத்தீவு கரையோர பூங்காவுக்கு அருகில் உத்தேச பல்லின கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்காக  பதில் மாநகர மற்றும் மேல்மாகாண அமைச்சர் லசந்த அழகியவர்ண சமர்ப்பித்த ஆவணத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மட்டக்குளி, காக்கைத்தீவு பிரதேசத்தில் வாழும் மக்களின்  பொது மக்கள் செயற்பாடுகளுக்கான தேவையான இடவசதிகளை வழங்கும் பொருட்டு அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு அருகாமையில் பல்லின கட்டிடத் தொகுதி ஒன்று உலக வங்கி நிதி உதவியுடன் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

65 பேர்ச் பரப்பளவு காணியில் அரை பகுதியான 14, 500   அடி சதுர பரப்பளவில் இந்த பல்லின கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.