(ரொபட் அன்டனி எம்.டி. லூசியஸ்)

நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் சந்திப்பில் அவர்  இதனை குறிப்பிட்டார். அவர் அஙகு   மேலும் குறிப்பிடுகையில் 

கேள்வி விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பதில் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடினேன். இவ்விடயம் தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என பிரதமர் தன்னிடம் உறுதி வழங்கினார்.

அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் வழக்கு தொடரப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது சுமார் 102 அரசியல் கைதிகளே சிறையில் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.