நேற்று செவ்வாய்க்கிழமை ( 2018.10.16) திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அமைச்சரவையின் தீர்மானங்கள் வருமாறு,

1. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை வலுவூட்டுதல் (நிகழ்ச்சி நிரலில் 07 ஆவது விடயம்)

அரச துறையில் நிதி ஒழுங்கு முறைகளை  முன்னெடுத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு உன்னதமான பணியை நிறைவேற்றி வருகிறது.  அரச நிதி ஒழுக்க செயற்பாட்டை மேலும் மேம்படுத்தி அரச பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்காக இவ்வாறான  பணிகள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்களை விசாரணைகளை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதற்காக  உள்ள  பயிற்சி வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. பாராளுமன்ற (அதிகாரம் மற்றும் சிறப்புரிமை) சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 09 ஆவது விடயம்)

பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமை - மற்றும் அதிகாரங்களை பிரகடனப்படுத்துவதற்கும் பொருள்வறைக்கும்  பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் அல்லது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் பாராளுமன்ற சலுகைகளை மீறுவதற்காக   தண்டனை விதிப்பதற்கும்  அதேபோன்று பாராளுமன்றத்தின் ஆவணம், குறிப்பு, வாக்களிப்பு அல்லது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பணிகளில் ஈடுபடும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக மேலே குறிப்பிடப்பட்ட  சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக பிரதமர் ரணில் விக்கிமசிங்க சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. காணியை பயன்படுத்தும் பொழுது சுற்றாடல் கட்டமைப்புக்கு ஏற்படும் பாததிப்பை கட்டுப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 11 ஆவது விடயம்)

வீட்டை அமைத்தல் மற்றும் ஏனைய பணிகளுக்காக காணிகளை பயன்படுத்துதல் மற்றும் வீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்கும் பொழுதும் அதன் மூலம் சுற்றாடலுக்கு ஏற்படுத்தப்படும் பாதகமான தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை இருந்த போதிலும் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் இந்த பிரச்சனைகளை குறைத்துக்கொள்ளும் வகையில் அரச மற்றும் தனியார் காணிகளை பயன்படுத்துவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவனத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. வெப்பத்தை கட்டுப்படுத்தும் களஞ்சிய மத்திய நிலையம் - குளிர்சாதன வசதி. வலைப்பின்னலை அமைப்பதற்கான ஊக்குவிப்பு (நிகழ்ச்சி நிரலில் 13 ஆவது விடயம்)

பழவகை மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட ஏனைய  சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தியாளர்களின் உற்பத்தியின் பின்னர் அறுவடை பணிகளின் போது எதிர்கொள்ளப்படும் சிரமங்களுக்கு தீர்வாகவும் அந்த தயாரிப்புகளுக்கான விலை ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த உற்பத்திகள் பெருமளவில் மேற்கொள்ளப்படும் பிரதேசங்களில் வெப்பக் கட்டுப்பாட்டு  களஞ்சிய மத்திய நிலையம் - குளிரூட்டல் வசதி வலைப்பின்னல் ஒன்றை அமைப்பதற்காக  தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் திட்டம்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. கிராம பாலங்களை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 14 ஆவது விடயம்)

கிராம பகுதிகளில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் மாகாணங்களுக்கிடையில் பிரதேச அபிவிருத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வை குறைப்பதற்காக  4000 கிராம பாலங்களை அமைக்கப்படுவதன் தேவை அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைய வெளிநாட்டு நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமப் பாலங்களை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் சுமார் 1000 பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலும் 250 கிராம பாலங்களை அமைப்பதற்காக முதல் திட்டத்த்தின் கீழ் மேலும் தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்காக  உடன்படிக்கை எட்டப்படவுள்ளது. இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர்  என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. 2020 ஆண்டு குடிசன மற்றும் வீடமைப்பு கணக்கீடு (நிகழ்ச்சி நிரலில் 15 ஆவது விடயம்)

குடிசன மற்றும் தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களத்தினால் 10 வருடத்துக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் குடிசன  மதிப்பீட்டை 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. குடிசன மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பை பட்டியலிடுதல் கட்டததில் 2020 ஆம் ஆண்டிலும் கணக்கிடுதல் மற்றும் தரவுகளை பிரபலபடுத்துதல், கட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டில் மேற்கொள்வதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. கையடக்க தொலைபேசிகள் மூலமான அழைப்பு தொடர்பு மற்றும் தரவுகளை பரிமாறும் செயல்திறனை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 16 ஆவது விடயம்)

கொழும்பு நகரம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் கையடக்க தொலைபேசிகளுக்கு சேவையை வழங்கும் எண்டனாவில் உள்வாங்குதல் குறைவடைவதனால் தமது பாவனையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில்  கையடக்க தொலைபேசிகளை முன்னெடுப்போர் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு தீர்வாக தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் கீழ்  கொழும்பு மற்றும் துணை நகர பிரதேசங்களில் மூலோபாய முக்கியமான இடங்களில்  கூரைகளின் மேல் என்டனாவை பொருத்தும் முறை ஒன்று வகுக்கப்படவுள்ளது. இதற்காக  தேசிய கொள்கை மற்றும்  பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. அரச துறையில் பணியாளர் தொடர்பாக 2018 ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு அறிக்கை (நிகழ்ச்சி நிரலில் 20 ஆவது விடயம்)

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் அரச துறை பணியாளர் சபை தொடர்பான அறிக்கை தொடர்பில் அமைச்சரவை கவனத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியளவில் அமைச்சு திணைக்களங்கள், மாகாண சபை, அரச கூட்டுத்தாபனம், அரச சபை, அரசாங்கம் கொண்டு நிறுவனங்கள் அடங்கலாக அரச பிரிவில் தற்பொழுது சேவையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்து 20 ஆயிரத்து 885 ஆவது உடன் சில அரச கூட்டுத்தாபனம் மற்றும் பணியாளர் சபையின் அங்கத்தினர்கள் 5 வருட மேற்பட்ட காலம் முதல் முறையான அனுமதி இன்றி  சேவையில் இருப்பதாகவும் கல்வி மற்றும் சுகாதார துறையில் தனியார்துறையில் பங்களிப்பு வீதம் அதிகரிப்பில்  அரச  துறையில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மேலதிக பதிவிகளை ஏற்படுத்துவதற்காக அது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் பொழுது குறிப்பிட்ட விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அமைச்சரவையினால்  கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

9. 1962 ஆம் ஆண்டு இலக்கம் 19 இன் கீழான வருமான பாதுகாப்பு சட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 22 ஆவது விடயம்)

பீடி இலை இறக்குமதி செய்யும் பொழுது அறவிடப்படும் சுங்க வரியில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும் செயற்கையாக சீனி அடங்கியுள்ள உணவு பானங்களை அறிந்துக்கொள்வதற்காக புதிய தேசிய உப விநியோக சுங்க மறைக்குறியீடாக்கத்தை ஏற்படுத்துவதற்காக விடுக்கப்பட்ட  2079ஃ32 வர்த்தமானி மற்றும்  சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் சுங்க வரி நிவாரணத்தை வழங்குவதற்காக  வெளியிடப்பட்ட இலக்கம் 2080-42 வர்த்தமானி அறிவிப்புக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கனக  நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 2007 ஆம் ஆண்டு இலக்க 48 இன் கீழான விசேட வர்த்தக பொருள் வரி சட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வர்த்தமானியை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 23 ஆவது விடயம்)

அத்தியாவசதி உணவுப் பொருட்களின்  சந்தை விலையை நிலையானதாக முன்னெடுத்தல் தட்டுப்பாடு இன்றி பாவனையாளர்களான பொது மக்களுக்கு இந்தப் பொருட்களை வழங்குதல், தேசிய விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பாதுகாத்தல். பல்வேறு வரிகளுக்குப்பதிலாக பொருத்தமான வரியை செலுத்துவதற்கு  வழிவகுக்கும் பொருட்டு 2018 மே மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் 2018 செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் அதற்கு  விசேட வர்த்தக பொருள் வரி வீதத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும் நிலவும் விசேட சந்தை  பொருட்களுக்கான  வரி  முறையை அவ்வாறே நீடிப்பதற்காக  வெளியிடப்பட்ட 08 வர்த்தமான அறிவிப்புக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 1989 ஆம் ஆண்டு இலக்கம் 13 இன் கீழான உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்)) சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவிப்பை சமர்ப்பிப்பதற்கான  அங்கீகாரம் (நிகழ்ச்சி நிரலில் 27 ஆவது விடயம்)

1989 ஆம் ஆண்டு இலக்கம் 13 இன் கீழான உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ்  வெளியிடப்பட்ட விசேட அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட எத்தகைய கட்டளைகளும் வெளியிடப்பட்ட நாள் தொடக்கம் நான்கு மாதக் காலப் பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கமைவாக  இதுவரையில் வெளியிடப்பட்டுள்ள  இனிப்புடனான பான வகைகள் சிலவற்றில் அடங்கியுள்ள   சேர்க்கப்பட்ட சீனியின் அளவின் அடிப்படையில் விதிக்கப்படும் உற்பத்தி வரியை திருத்துவதற்கான இலக்கம் 2079 – 58 இன் கீழான  வர்த்தமானி அறிவிப்பு, 2018 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் மோட்டர் வாகனத்தை இலங்கை சுங்கப்பகுதியினால் விடுவிப்பதற்கான நிபந்தனைகளை நீக்குவதற்கான 2080-31 இலக்க வர்த்தமானி அறிவிப்பு ,சிகரட்டின் மீதான உற்பத்தி வரி திருத்தத்துக்கான 2082 – 11 இலக்க வர்த்தமானி அறிவிப்பு மற்றும் இஞ்ஜின் 1000 வலுவுக்கு குறைந்த மோட்டார் வாகன மீதான தயாரிப்பு வரி திருத்தத்துக்கான இலக்கம் 2082-10 மற்றும் இலக்கம் 2083-02 என்ற வர்த்தமானி அறிவிப்புக்கும் அங்கீகாரம் வழங்கும் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. கட்டிடம் மீது பொருத்தப்படும் சூரிய சக்தி கட்டமைப்பு மூலம் சூரிய மின் சக்தியை உற்பத்தியை செய்வதற்கான திட்டத்துக்கான கடன் பரிந்துரை முறை. (நிகழ்ச்சி நிரலில் 28 ஆவது விடயம்)

அனைத்து வீடுகளிலும் வர்த்தக கட்டிடங்கள் - தொழிற்சாலைகளின் மீதும் சூரிய மின் சக்தி உற்பத்தி கடட்டமைப்பை அமைப்பதன் மூலம் 2020 ஆம் ஆண்டளவில் 200 மெகா வோட் மற்றும் 2025 ஆம் ஆண்டளவில் 1000 மெகா வோட்  மின்சாரத்தை தேசிய மின்சக்தி விநியோகத்துடன் ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள சூரிய பல சங்ராமய என்ற திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில்  உத்தேச கடன் ஆலோசனை முறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இதற்கமைவாக வீடு மற்றும் வர்த்தக கட்டிடங்கள் அல்லது தொழிற்சாலைகளின் மீது பொருத்தப்படும் சூரிய சக்தி கட்டமைப்புக்கான நிதி வசதியை கடன் ஆலோசனையின் கீழ் வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காகவும் பங்குகொள்ளும்  நிதி நிறுவத்துடன்  துணை உடன்படிக்கையை எட்டுவதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்  மங்கள சமரவீர  சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. தாய்ப்பாலை ஊட்டுதலை மேம்படுத்தல். பாதுகாத்தல், மற்றும் ஊக்குவித்தல் மற்றும் பெயரிடப்பட்டு குறிப்பிடப்பட்ட தயாரிப்பை விற்பனை செய்வது தொடர்பான இலங்கை சட்ட ஏற்பாட்டுக்குப்பதிலாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 33 ஆவது விடயம்)

குழந்தைகளின்  உடல் ஆரோக்கிய சுகாதார நிலைமையையும்  போசாக்கு மற்றும் அறிவு  வளர்ச்சியைப் பெறுவதற்கும் மந்தப் போசாக்கை குறைப்பதற்கும் மற்றும் பிற்காலப் பகுதியில் தோற்ற நோய்களிலிருந்து தடுப்பதற்கும் தாய்ப்பால் முக்கிய பங்களிப்பை வழங்கிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார மாநாட்டு உடன்பாடு (1981) அமைவாக தாய்ப்பாலுக்குப்பதிலாக விநியோகிக்கம் தொடர்பாக சர்வதேச சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட உலகின் முதல் நாடுகள் மத்தியில் இலங்கையும் ஒன்றாகும். அத்தோடு 2015 சர்வதேச ரீதியில் தாய்ப்பால்   வழங்குவதில் வளர்ச்சி அறிக்கைக்கு அமைய இலங்கை தாய்ப்பால் ஊட்டலில் முதலாவது இடத்தைப்  பெற்றுள்ளது. குழந்கைகள் மற்றும் சிறுவர்களுக்கான பால் உணவு தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக உணவு மேம்படுத்துவதன் மூலம் இடம்பெறும் சவால்களைப் போன்று சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான உணவுவகைகளின் பிரபலமாவதை தடுப்பதற்கான வலுவான சட்ட கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்காக புதிய திருத்த சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு  ஆலோசனை வழங்குவதற்காக சுகாதாரம்  போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 14. சிறுநீரக நோய் மற்றும் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு பராமரிப்பு  சிகிச்சையை வழங்குதற்காக அனுராதபுரத்தில் சிகிச்சை மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 34 ஆவது விடயம்)

காரணம் அடையாளம் காணப்படாத தொற்றா சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோயினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு அனுராதபுரம் நகரில் பராமரிப்பு   சிகிச்சை சேவை மத்திய நிலையம் ஒன்றை நன்கொடை ரீதியில் வழங்குவதற்கு அவுஸ்திரேலியாவின் சாந்தி அமைப்பினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.   உத்தேச மத்திய நிலையத்தின் கீழ்  தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான பராமரிப்பு  சிகிச்சைப் பிரிவொன்றும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவும் பராமரிப்பு சிகிச்சைச் சேவை, பயிற்சி மற்றும் ஆய்வுப் பிரிவு ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச சிகிச்சை மத்திய நிலையத்தை அமைப்பதற்கும் அதனை முன்னெடுப்பதற்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று அவுஸ்திரேலியாவின் சாந்தி அமைப்புக்கும் சுகாதார போஷாக்கு  மற்றும் சுதேச வைத்தித்துறை அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த பராமரிப்பு   சிகிச்சை சேவை மத்திய நிலையத்தை அமைப்பதற்கும் பாராமரிப்பதற்குமாக சுகாதார போசாக்கு மற்றும் சுதெச வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு (நிகழ்ச்சி நிரலில் 42 ஆவது விடயம்)

இரு நாடுகளைச் சேர்ந்த பெருந்தோட்டத்துறையின் நலனுக்காக இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் அந்நியோன்ய புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதுடன், இதில் முக்கிய நடவடிக்கையாக தேயிலை. இறப்பர் மற்றும் தெங்கு ஆகிய பெருந்தோட்டப் பிரிவுகளின் அபிவிருத்திக்காக  புரிந்துணர்வு உடன்படிக்கையைப் மேற்கொள்ளும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. சிக்கனமான முறையில் மின்சாரத்தை பயன்படுத்துவதற்கான மூலோபாய முறையை வகுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 43 ஆவது விடயம்)

இலங்கையின்; மின் விநியோகம் 100 சதவீதமாக மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக 24 மணித்தியாலமும் மின் விநியோகத்திற்காக அரசாங்கத்தினால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் சிக்கனத்துடன் மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மின்அலகுக்காக  வருடாந்தம் செலவிடப்படும் எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்துவதன் மூலம் மின்சார உற்பத்திக்கான செலவை கட்டுப்படுத்த முடியும். இதற்கமைவாக சிக்கனமான முறையில் மின்சாரத்தை பயன்படுத்துவதற்கான  நடைமுறையிலான  ஆலோசனை ஒன்றை முன்வைப்பதற்காக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளரின் தலைவரைக் கொண்ட அதிகாரி குழுவொன்றை நியமிப்பதற்காக  மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாப்பிட்டி அவர்களும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாரிய குளத்தின் மூலம் பயனடையும் குளங்களை மறுசீரமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 44 ஆவது விடயம்)

மன்னார் மாவட்டத்தில் பாரிய குளங்கள் 3800 எக்டர் நிலப்பரப்பிலும் பார்க்க பரந்துபட்டு காணப்படுவதுடன்   இதன் கீழ் சிறிய  62 குளங்கள் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் நிலவிய மோதல் நிலை காரணமாக மூன்று தசாப்த காலத்தில்  பாரிய குளங்களின் கீழ் போசிக்கப்படும் குளங்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவி;ல்லை. இதற்கமைவாக 40 நீர் கால்வாய்களை சீர் செய்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காகவும்  நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிச்த திசாநாயக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. 'என்டர்சன் ; மாடி வீடு கட்டிடத் தொகுதியில் I, H மற்றும் N கட்டிடங்களை புனரமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 51 ஆவது விடயம்)

என்டன்  மாடிவீடு கட்டிடத் தொகுதியில் வீட்டு அலகில் 48 வீடுகள் உடனான ஐஎச் மற்றும் என் ஆகிய கட்டிடங்கள்  மூன்றும் வீட்டலகு 144 ம் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கனிஷ்ட தர அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வீடுகளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த வீடுகள் 50 வருட காலம் பழமை வாய்ந்தவை. அத்தோடு விரைவாக செப்பனிடுவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார  அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. சொந்துரு பியச நிவாரண கடன் திட்டத்திலான பயனாளிகளுக்கான அடிப்படையை  விரிவுபடுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 55 ஆவது விடயம்)

சொந்துரு பியச கடன்  திட்டத்திலான பயனாளிகளுக்கான அடிப்படையை விரிவுபடுத்துவதற்காக இந்த கடன் ஆலோசனை முறையின் கீழ் தகுதி பெறுவதற்கு  வீட்டுக்கான  நில அளவை 1000 சதுர அடிகளாக குறைக்கப்பட வேண்டும் என்று இருந்த வரையறை 1500 சதுர அடியாக அதிகரிக்கப்படவுள்ளது. இதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. மாதிரிக் கிராம வேலைத்திட்டத்தின் மூலம் ஏற்றுமதி கிராம வேலைத் திட்டத்தை சமூகமயப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 56 ஆவது விடயம்)

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஏற்றுமதி கிராம வேலைத் திட்டத்தின் ஊடாக மாதிரிக் கிராமங்களில் வாழுவோரின் பொருளாதாரம் மற்றும் சுற்றாடல் அபிவிருத்தியை அடைய முடியும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  மாதிரிக் கிராமங்களின் வாழும் பயனாளிகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட ஏற்றுமதி பெருந்தோட்ட உற்பத்திகளை மேற்கொள்வதற்கான தேவையான  கன்று வகைகள் அறிவு மற்றும் ஏனைய தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை வழங்குதல் அல்லது உற்பத்தி தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கான தேவையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் பயனாளிகளின் வாழ்வாதாரத்துக்கான வசதிகளை செய்து கொடுக்க முடியும். இதற்கு அமைவாக மாதிரிக்கிராமங்களுக்கு அருகாமையில் சமூக சேமநல மற்றும் ஆரம்ப கைத்தொழில்துறை அமைச்சுடன் இணைந்து எற்றுமதி கிராம வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுததுவதற்கு வீடமைப்பு நிரமமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த பரிந்துறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. நிருவாக மாவட்ட மட்டத்தில் சமாதான நீதவான்களை நியமிப்பதற்கான 1978 ஆம் ஆண்டு இலக்க 2 இன் கீழான நீதிமன்ற எற்பாடுகள் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 61 ஆவது விடயம்)

சமாதான நீதவான்களை நியமிக்கும்பொழுது இதுவரையில் இருந்து வந்த நீதிமன்ற வலய மாவட்ட மற்றும் தொகுதிகளுக்கு பதிலாக நிருவாக மாவட்டத்துக்கான சமாதான நீதவான்களை நியமிக்கக் கூடிய வகையில்  சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கி  1928 ஆம் ஆண்டு இலக்கம் இரண்டின் கீழான நீதிமன்ற ஏற்பாடுகள் சட்டத்தில் 45 ஆவது சரத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள  திருத்த சட்டத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோறளை அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. நீதிமன்ற கட்டிடத் தொகுதி மற்றும் அவற்றில் உள்ள உத்தியோகபூர்வ வீடுகளை புனரமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 62 ஆவது விடயம்)

கொழும்பு வர்த்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிமன்ற சேவை ஆணைக்குழு கட்டிடம், பாரம்பரிய பெருமதியுடனான பழமைவாய்ந்த கட்டிடத் தொகுதியாக  முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அவை பழமையானவை என்பதினால் துரிதமாக புனரமைக்கப்பட வேண்டுமென்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதே போன்று கொழும்பு நீதிமன்ற உத்தியோகபூர்வ வீடு சிலாப மாவட்ட – நீதிவான் நீதிமன்றத்தை உள்ளடக்கியுள்ள கட்டிடத் தொகுதியை விரைவாக மறுசீரமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.  இதற்கமைவாக இந்த நிர்மாணப்பணிகள்  அரசாங்கம் கொண்டுள்ள  நிர்மாண நிறுவனங்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்வதற்காக நீதி மன்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோறளை அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22 . மண் சரிவு அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ள கேகாலை நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை நிலைநிறுத்தல்

80 வருடங்கள் பழழைவாய்ந்த கட்டிடத் தொகுதியுடனான கேகாலை நீதிமன்ற கட்டிடத் தொகுதி அமைந்துள்ள பகுதி மண் சரிவு அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளது.  இதிலிருந்து மீட்டெடுப்பதற்காக இந்த பகுதியை நிலையானதாக்குவதற்கு  தேவையான நிதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக  நீதி மன்றம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலாதா அத்துகோறள அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. கதிர்காம புனித பூமியை அபிவிருத்தி செய்யும் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 67 ஆவது விடயம்)

உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்களின் யாத்திரைக்கு முக்கியமானதாக விழங்கும் கதிர்காம புனித பூமிக்கு வருகை தரும் பொது மக்களின் சேமநலனுக்காக அந்த நகரத்தில் வாகன தரிப்புக்கான வசதி. இயற்கை கழிவு அறை வசதி, நீர்வசதி, தின்மக்கழிவுபொருட்களை அகற்றுவதற்கான வசதி, மற்றும் தங்குமிட வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தப்பட வேண்டுமென அடையாளம் காணப்பட்டுள்ளது.  இதற்கமைவாக பொது வசதி, பொலிஸ் காவலரண், வாகன தரிப்பிடம், பாதுகாப்பு கட்டிடம், ஓய்வு மண்டபம், மற்றும்  மேம்படுத்தப்பட்ட வீதி கட்டமைப்புடன் கதிர்காம புனித பூமியை அபிவிருத்தி செய்வதற்காக இளைஞர் அலுவல்கள் திட்ட முகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகர ரத்நாயக்க அவர்களும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவிக்க அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24. இலங்கை தேசிய தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான மூல உபாயம் (நிகழ்ச்சி நிரலில் 68 ஆவது விடயம்)

2018 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு காலப் பகுதியில் தேசிய தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான மூலோபாய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த மூலோபாய செயற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக இலங்கை பிரஜைகளுக்கும் ஏனைய தரப்பினருக்கும் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்களை அடையக்கூடிய நம்பிக்கையான சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இத்துறையில் முன்னோடிகளின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள சைபர் பாதுகாப்பு மூலோபாயத்தை செயற்பாடுத்துவதற்காக தொலைத்தொடர்பு டிஜிட்டல் அடிப்படை வசதி  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.