டெல்லியில் நடந்த துர்க்கா பூஜை கொண்டாட்டத்தில் பாடலை மாற்றுமாறு எழுந்த வாய்த்தர்க்கத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி – கயிலா எனுமிடத்தில் நடைபெற்ற துர்க்கா பூஜை கொண்டாட்டத்தின் போது பக்தி பாடல் ஒளிபரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த இருவரிடமும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு நபர் பாடல்களை மாற்றுமாறு கூறியுள்ளார்.

இவ் விடயத்தினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறி இறுதியில் பக்தி பாடல் ஒளிபரப்பிய இருவரும் சேர்ந்து மற்றைய நபரை கத்தியால் குத்தியும் தாக்கியுமுள்ளனர்.

படுகாயமடைந்த குறித்த நபரை அருகிலிருந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.