ஊவா மாகாண தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை தேவை - அரவிந்தகுமார்

Published By: Digital Desk 4

17 Oct, 2018 | 03:38 PM
image

தீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு அதற்கு முதல் தினமான 05.ஆம் திகதி தமிழ்ப்பாடசலைகளுக்கு விடுமுறை வழங்கக் கோரி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இந்து மக்கள் வெகு விசேடமாக கொண்டாடும் சிறப்புப் பண்டிகை தீபாவளிப் பண்டிகையாகும். இப் பண்டிகை அடுத்த மாதம் 6ஆம்  திகதி செவ்வாய்க்கிழமையன்று  வருவதனால் அதற்கு முன் தினமான 5 ஆம் திகதி திங்கட்கிழமை ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டியது அவசியமாகும்.

தீபாவளிப்பண்டிகைக்கு முதல் தினம் இரவு இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் நிகழ்வுகள் செய்யப்படும். ஆகையினால் தமிழ் மாணவர்களினால் பெரும்;பாலானோர் தீபாவளிப் பண்டிகைக்கு முந்தினம் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பதில் பெரும் தயக்கம் காட்டி வருவது வழமை.

 அத்துடன்  தமிழ்ப் பாடசலைகளின் அதிபர், ஆசிரியர்களுக்கும், இதே நிலை இருந்து வருகின்றது. ஆகவே தீபாவளித் தினத்திற்கு முன்தினமான 5 ஆம் திகதி விடுமுறை வழங்கி அன்றைய விடுமுறை தினத்தினை பிறிதொரு சனிக்கிழமையில் பாடசாலைகளை இயங்க வைக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37