பதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுவருகின்ற நிலையில் அவர்களுக்கான ஆகஸ்ட் மாத ஆசிரியர் உதவியாளர் கொடுப்பனவு கிடைக்மையினால் அவர்கள் பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்குமாறு பதுளை  வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அவரசக் கடிதமொன்றையும் அரவிந்தகுமார் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.