திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான மக்கெய்சர் விளையாட்டரங்கின் அமைந்திருந்த உடற்பயிற்சிக் கூடம் இன்று  அதிகாலை ஏற்பட்ட தீயினால் எரிந்து நாசமானது.

இன்று காலை ஏற்பட்ட புகை காரணமாக சம்பவ இடத்திற்கு சென்ற பார்வையிட்ட நகரசபை அதிகாரிகள் தீ பரவியதை அறிந்து தமது தீயனைப்பு பிரிவின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டக்குள் கொண்டு வரபட்டது.

இருப்பினும் பல இலட்சம் பெருமதியான உடற்பயிற்சி உபகரணங்கள் இந்த தீயில் எரிந்துள்ளது.

மக்கெய்சர் விளையாட்டரங்கு புனரமைப்பு காரணமாக நீண்ட காலம் பாவனையில் இல்லாமல் இந்த உடற்பயிற்சிக் கூடம் காணப்பட்டது.

இத்திவிபத்து தொடர்பாக திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தினர் விசாரனையை மேற் கொண்டு வருகின்றனர்.