எல்லைத் தாண்டி மீன்பிடித்து கைதான தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதித்திருக்கும் அநியாய அபராதத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘பெற்றோல் டீஸல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

இன்று அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 46 ஆண்டு நிறைவடைந்து 47 ஆம் ஆண்டின் தொடக்க விழா காண்கிறது. இந்த இயக்கமானது பவள விழாக்கண்டு , நூற்றாண்டையும் எட்டிப் பிடிக்கும். அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு வாயில் மண் தான். 

அ.தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் தி.மு.க. தான் ஊழலின் மொத்த உருவம். எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களில் ஆறு மீனவர்களுக்கு 60 இலட்ச ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மூன்று மாத சிறைதண்டனையும் அளிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

 இது அபாண்டமான ஒன்று. ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது தொடர்பாக இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். மத்திய அரசிடமும் பேசுவோம். தமிழக அரசால் இயலும் அனைத்து நடவடிக்கைகளும் இவ்விடயத்தில் மேற்கொள்ளப்படும்.’ என்றார்.