ஆப்கானிஸ்தானில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் - ஹெல்மண்ட பகுதியில் நாடளுமன்ற தேர்தல் வேட்பாளர் அப்துல் ஜபார் கஹ்ரமனின் அலுவலக ஆசனத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தே அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் அலுவலகத்திலிருந்த எழுவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இக் குண்டு வெடிப்புத் தாக்குதல் தலிபான்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்  என அந் நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.