அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில், கரடிக் குட்டியொன்று பிளாஸ்டிக் போத்தலொன்றுக்குள் தலையை நுழைத்து வசமாக சிக்கிக் கொண்டது.

மூன்று நாட்களாக பிளாஸ்டிக் போத்தாலை தலையிலிருந்து அகற்றாது சுற்றிய அக் கரடிக் குட்டிக்கு 'பக்கெட் ஹெட்' என செல்லப் பெயர் சூட்டியுள்ளனர்.

இந் நிலயைில் பிளாஸ்டிக் போத்தலுடன் சுற்றி திறிந்த கடிக் குட்டியின் செயற்பாடுகளை காணொளி எடுத்து பவுல் மோரிஸ் என்பவர் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிறக்கம் செய்தார். இதனையடுத்து அந்த காணொளிக் காட்சி சமூகவலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது.

அத்துடன் பக்கெட் ஹெட்டை ஜாரில் மாட்டிக் கொண்டதிலிருந்து விடுவிக்கப்பட்ட வரை எடுக்கப்பட்ட புகைப்படங்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை மேரிலேண்டின் இயற்கை வளத் துறையினர் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.